மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை: சோகத்தில் இருந்த குழந்தை? டில்சன் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் டில்சான் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்த சம்பவம் அனைவரிடத்திலும் பாராட்ட வைத்துள்ளது.

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் அதிரடி ஆட்டக்காரர் டில்சான். இவருக்கென்றே இலங்கையில் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. தன்னுடைய ரசிகர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்யும் தன்மை கொண்டவர்.

இந்நிலையில் அண்மையில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் இறந்துள்ளார். அவர் டில்சனின் தீவிர ரசிகர், அந்த நபரது

குழந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்கள் கட்டும் வீட்டிற்கு அடிக்கல் எடுத்துக்கொடுத்து ஆரம்பித்து வைத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது வீடு கட்டும் பணி தொடங்கியுள்ளது, இதற்கான உதவியைத் தான் செய்வேன் என்றும், தன்னுடைய ரசிகர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும், இவ்வீட்டின் முழு அழகைப் பார்ப்பதற்கு தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments