ஒலிம்பிக் நாயகிகளின் தங்கம் பறிப்பு! ஊக்க மருந்து பயன்படுத்தியது நிருபணம்

Report Print Aravinth in ஏனைய விளையாட்டுக்கள்
141Shares
141Shares
ibctamil.com

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற 3 வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்-வீராங்கனைகளிடம் இருந்து எடுத்து சேமித்து வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சமீபத்தில் ரஷ்ய வீரர்- வீராங்கனைகளின் மீது ஊக்க மருந்து குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து மறுபரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பதக்கம் வென்றவர்கள் உட்பட 98 பேர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஜகஸ்தானை நாட்டைச் சேர்ந்த 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற சுல்ப்யா சின்ஷான்லோ (53 கிலோ), மையா மானெஜா (63 கிலோ), ஸ்வெட்லானா (75 கிலோ) ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இதனால், இந்த வீராங்கனைகளின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

மேலும், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியவர்களிடம் விசாரணை நடத்தி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 6 பேர் உள்பட 9 வீரர், வீராங்கனைகள் தகுதி இழந்தவர்களாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments