தென் ஆப்பிரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய இலங்கை வீரர்கள்: புகைப்படம் உள்ளே

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள இலங்கை வீரர்கள் அங்கு கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடிய புகைப்படத்தை தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று போர்ட் எலிசபெத்தில் உள்ள எஸ்டி ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இலங்கை அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள போர்ட் எலிசபெத்தில் கிறிஸ்துமஸ் தின பார்ட்டியை கொண்டாடியுள்ளனர்.

அது தொடர்பான புகைப்படத்தை உபுல் தரங்கா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments