மனைவியின் ஆடை சர்ச்சை கிளப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த சமி

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி தன்னுடைய மனைவியின் ஆடை குறித்து சர்ச்சை கிளப்பியவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

முகமது சமி நேற்று முன்தினம் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அப்புகைப்படத்தில் சமியின் மனைவி ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தார், இந்த புகைப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இஸ்லாமிய மதக்கொள்கைப்படி மனைவியின் புகைப்படத்தை இது போல பொதுவெளியில் வெளியிடுவது தவறு என்று சில மதவாத இணையவாசிகள் சர்ச்சையை உருவாக்கினர். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் சமி நாகரிக ஆடை அணிந்த தன் மனைவியின் மற்றொரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்து சற்று கோபத்துடன் பதில் அளித்துள்ளார்.

அதில், எல்லோராலும் வாழ்க்கையில் சாதிக்கமுடியாது. அதிர்ஷ்டம் கொண்ட சிலருக்கு மட்டுமே அது அமையும். எனவே பொறாமையுடன் நீங்கள் இருக்கவும்.

என் மனைவியும் மகளும்தான் என் வாழ்க்கை. எனவே என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

எந்தளவுக்கு மனிதர்களாக நடந்துகொள்கிறோம் என்பதை நாம் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments