ஹொட்டலில் அறை எடுத்து தங்கிய கோஹ்லி, அனுஷ்கா! ஏன்? வெளியான ரகசிய தகவல்

Report Print Jubilee Jubilee in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஹ்லியும், அனுஷ்காவும் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட தற்போது உத்தரகாண்ட் சென்றுள்ள அவர்கள் அங்குள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் தங்களது நீண்ட கால உறவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அங்கு இருவரும் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக புத்தாண்டு அன்று அமிதாப் பச்சன், அனில் அம்பானி, அவருடைய மனைவி டினா அம்பானி மற்றும் சில கிர்க்கெட் வீரர்களும் அங்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அனுஷ்கா, கோஹ்லியின் குடும்பத்தாரும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்கனவே ஹொட்டலுக்கு வந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments