கலவர பூமியில் சிக்கித்தவித்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்: தப்பித்துச் சென்றது எப்படி?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக திங்கட்கிழமை சென்னையின் பல பகுதிகளில் வன்முறை நிகழ்வுகள் நடந்த சமயத்தில் இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை உட்பட பல மாவட்டங்களில் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலரும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இப்போராட்டம் நேற்று வன்முறையாக வெடித்தது. இதில் போராட்டக்காரர்களை பொலிசார் தடியடி அடித்து வெளியேற்றினர். இதனால் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைத்தல் என தமிழகமே ஒரு போராட்டம் பூமிபோல் காட்சியளித்தது.

இந்த பதற்றமான நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தமிழக வீரரான அஸ்வின் சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார். அதன் பின்னர் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் பயணித்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதை அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழகத்தின் இந்த பரபரப்பான சூழலில் பாதுகாப்பான பயணத்துக்கு வழிகாட்டிய காவல்துறையினருக்கு நன்றி என பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments