பிரபல செல்போன் நிறுவனம் மீது டோனி பரபரப்பு புகார்! அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
367Shares
367Shares
lankasrimarket.com

மேக்ஸ் செல்போன் நிறுவனம் மீது பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், முன்னாள் தலைவருமான மகேந்திர சிங் டோனி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், விளம்பரம் தொடர்பாக மேக்ஸ் செல்போன் நிறுவனத்துடன் முதலில் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

பின்னர், அந்த ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதாகவும், அதன் பின்னும் தன் பெயர் மற்றும் புகைப்படத்தை அந்த நிறுவனம் பயன்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே போன வருடம் ஏப்ரல் மாதம் நீதிமன்றம் டோனி புகைப்படம் மற்றும் பெயரை மேக்ஸ் நிறுவனம் பயன்ப்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments