பிரபல அழகியுடன் சிக்கிய உசைன் போல்ட்: வெளியான புகைப்படங்கள்

Report Print Peterson Peterson in ஏனைய விளையாட்டுக்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதங்களை குவித்த உசைன் போல்ட் ஜேர்மனி நாட்டில் பிரபல அழகியுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஜமைக்கா நாட்டை சேர்ந்த உசைன் போல்ட் தங்கப்பதங்களை குவித்து உலகளவில் பிரபலமானார்.

இப்போட்டிகளுக்கு பிறகு லண்டனுக்கு புறப்பட்ட பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது போன்று வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான Holly Young(23) என்பவருடன் தனது உல்லாசப்பயணத்தை உசைன் போல்ட் தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் இருந்து புறப்பட்ட இருவரும் ஜேர்மனிக்கு சில நாட்களுக்கு முன்னர் சென்றுள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள முனிச் நகரில் இருவரும் சேர்ந்த 4 நாட்களாக தங்கியிருந்ததாகவும், விடுமுறையை இருவரும் உல்லாசமாக கழித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உசைன் போல்ட்டுடன் இருக்கும் புகைப்படங்களை மொடல் அழகி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இப்புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments