ஐபிஎல்-ல் களமிறங்காமலே சாதனை படைத்த கோஹ்லி: எதில் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் 10வது சீசன் டி20 தொடரில் இன்னும் களமிறங்காமலேயே விராட் கோஹ்லி, சமூக வலைத்தளங்களில் பல நட்சத்திரங்களை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் 10வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைப்பெற்று வருகின்றது. இதில் பெங்களூரு அணித்தலைவர் கோஹ்லி, காயம் காரணமாக தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என போட்டி தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டுள்ள கோஹ்லி நாளை மும்பை அணிக்கு எதிராக நடைப்பெறும் போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த சீசனில் பெங்களூரு விளையாடியுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடாத கோஹ்லி, சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் புகுந்து விளையாடி டாப்10 வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

பேஸ்புக்கில் டாப்10 ஐபிஎல் வீரர்கள்:

 1. கோஹ்லி (பெங்களூரு),
 2. டோனி (புனே),
 3. யுவராஜ் சிங் (ஐதராபாத்),
 4. ரோகித் சர்மா (மும்பை),
 5. சகிப் அல் ஹசன் (கொல்கத்தா),
 6. கிரிஸ் கெய்ல் (பெங்களூரு),
 7. தவான் (ஐதராபாத்),
 8. கவுதம் கம்பிர் (கொல்கத்தா),
 9. ஹர்பஜன் சிங் (மும்பை) மற்றும்
 10. கிளன் மேக்ஸ்வெல் (பஞ்சாப்)

இன்ஸ்டாகிராமில் அசத்தும் வீரர்கள்:

 • கோஹ்லி (பெங்களூரு),
 • டோனி (புனே),
 • டிவில்லியர்ஸ் (பெங்களூரு),
 • யுவராஜ் சிங் (ஐதராபாத்),
 • ரோகித் சர்மா (மும்பை),
 • சுரேஷ் ரெய்னா (குஜராத்),
 • கிறிஸ் கெய்ல் (பெங்களூரு),
 • ஹர்பஜன் சிங் (மும்பை),
 • ரவீந்திர ஜடேஜா (குஜராத்),
 • ரஹானே (புனே).

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments