இலங்கையை புரட்டி போட்ட வெள்ளம்: கிரிக்கெட் வீரர்களின் உருக்கமான பதிவு

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கையில் தென்மாகாணம் உட்பட 12 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் இம்மாவட்டங்கள் நீரில் மூழ்கின.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், 120-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 500-க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அங்கு மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன் டிராபி தொடருக்காக இலங்கை வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மிகுந்த சோகத்திற்குள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களின் உருக்கமான பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இலங்கை அணியின் தலைவரான மேத்யூஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், போட்டி முடிந்த பின்னர் சோகமான செய்தியை கேட்டேன். இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொள்வதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த பதிவேற்றத்தில் மேத்யூஸ் #prayforsrilanka என்ற ஹாஸ் டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனே, இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.


இலங்கை அணியின் மற்றோரு முன்னாள் வீரரான சங்ககாரா தனது டுவிட்டர் பக்கத்தில். இந்த வெள்ளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments