கோல்ஃப் ஜாம்பவான் டைகர் உட்ஸ் கைது

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

உலகப் புகழ்பெற்ற கோல்ஃப் வீரர் அமெரிக்காவின் டைகர் உட்ஸ், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய புகாரில், அந்நாட்டின் ஃபளோரிடா மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதாகும் உட்ஸ், கடந்த பிப்ரவரி மாதம் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, தொழில்முறை கோல்ஃப் விளையாட்டில் இருந்து கட்டாய ஓய்வில் இருக்கிறார்.

சீக்கிரமே கோல்ஃப் போட்டிகளில் விளையாட ஆரம்பிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் மது அல்லது போதைப் பொருள் உட்கொண்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பொலிசார் விடுவித்தனர்.

முன்னர் உட்ஸ், 'எனக்கும் உடனடியாக தொழில்முறை கோல்ஃப் விளையாட வேண்டும் என்று ஆசைதான். ஆனால், இப்போது மறுபடியும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு காயம் காரணமாக நான் ஓய்வில் இருக்க முடியாது.' என்று தெரிவித்திருந்தார்.

14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள டைகர் உட்ஸ் பெண்கள் விவகாரத்தில் சிக்கி குடும்ப வாழ்க்கையில் சறுக்கலை சந்தித்து, மது போதை மருந்துக்கு அடிமையாகி தற்போது மீண்டு வருகிறார்.

மட்டுமின்றி 2013-ம் ஆண்டுக்குப் பிறகு உட்ஸ், எந்தவொரு முக்கிய போட்டியிலும் வெற்றி பெறவில்லை. 2008-க்குப் பின்னர் அவர் எந்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments