ரசிகையின் கடிதம்: நெகிழ்ந்து போன சச்சின் டெண்டுல்கர்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு அவரது ரசிகை ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள சச்சின், அஞ்சனா உங்களது கடிதத்துக்கு மிக்க நன்றி, உங்களை போன்ற ரசிகர்கள் தான் என்னை இன்னும் சிறந்தவற்றை செய்ய ஊக்கமளிக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிததத்தின் முழு விபரம்,

சார் இந்தக் கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஏனெனில் இக்கடித்தத்தை என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட்டின் கடவுளுக்கு எழுதப் போகிறேன்.

இக்கடிதம் சரியான கைகளில் சேருமா என்று எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

என் பெயர் அஞ்சனா நான் கேரளாவைச் சேர்ந்தவள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருகிறேன். நீங்கள் கிரிக்கெட் போட்டிகளை ஆடிய காலத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

அவை வெறும் கிரிக்கெட் போட்டிகள் அல்ல, பேட்டால் எழுதப்பட்ட கவிதைகள். வெறும் திறமை மட்டும் அல்ல. உங்களது உன்னத குணத்தையும் சேர்த்தது. இதுதான் உங்களை நாங்கள் நேசிக்க முதன்மை காரணம்.

உங்களது மீது வைக்கப்பட்டுள்ள அன்பிற்கு பல வடிவங்கள் உள்ளன. சிலர் உங்களை மகனாக பார்க்கிறார்கள், சிலர் சகோதரராக பார்க்கிறார்கள், இன்னும் சிலர் உங்களை தோழனாக பார்க்கிறார்கள். இதனால்தான் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.

ஃபேஸ்புக்கில் தாங்கள் அபிமானம்கொண்டவர்களுக்காக முகநூல் பதிவர்கள் எழுதிய கடிதங்களைப் படித்த பிறகு நானும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதவேண்டும் என்ற யோசனை என்னுள் வந்தது.

கூகுளும் உங்களது முகவரி வழங்கியது. மிக்க நன்றி. நான் உங்களுக்கு கடிதம் வழங்குவது போல் பலமுறை கனவு கண்டுள்ளேன். ஆனால் தற்போது என் கனவு நினைவாக போகிறது. நிறைய கூற நினைக்கிறேன். ஆனால் வார்த்தைகள் என் முன்னால் தயங்கி நிற்கின்றன.

நீங்கள் அடுத்தமுறை கேரளா வந்தால் என் இல்லத்துக்கு வர அழைப்பு விடுப்பேன். அது எங்களுக்கு பெருமையாக இருக்கும். நான் உங்களை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில்தான் பார்த்திருக்கிறேன். உங்களை நேரில் காண்பதென்பதே எனது இறுதியான விருப்பம்.

உங்களிடமிருந்து ஆட்டோகிராப் கிடைக்கவும் வேண்டுகிறேன். அது நான் பெற்றதிலேயே மதிப்புமிக்கதாக இருக்கும்.

கேரளா பிளாஸ்டர் போன்ற அற்புதமான அணியை தந்ததற்கும் மிக்க நன்றி. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா...

நீண்ட நாள் வாழ்க அன்பு மற்றும் நன்றியுடன் அஞ்சனா. எஸ் என்று எழுதியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments