கோஹ்லி அவுட்டாக இவர் தான் காரணமா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்க பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் ஜைனாப் அப்பாஸ் தான் காரணம் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

இவர் பாகிஸ்தான் விளையாட்டு செய்தியாளர், டிவி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இங்கிலாந்தில் இருக்கிறார்.

ஜூன் 7ம் திகதி நடந்த போட்டியில் டிவில்லியர்சும், 8ம் திகதி நடந்த போட்டியில் வீராட் கோஹ்லியும் டக் அவுட்டானார்கள்.

இதற்கு ஜைனாப்புடன் செல்பி எடுத்ததே காரணமாம், அவரது ராசி தான் இப்படி ஆகிவிட்டது என நெட்டிசன்கள் குறைகூற ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments