அப்ரிடியை பார்த்தவுடனே மயங்கிவிட்டேன்: பாலிவுட் நடிகை ஓபன் டாக்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
555Shares
555Shares
lankasrimarket.com

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சயீத் அப்ரிடியை பார்த்தவுடனே மயங்கிவிட்டதாக, பாலிவுட் நடிகை சரீன் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சயீத் அப்ரிடிக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அவர் அடிக்கும் சிக்ஸரைக் கண்டு, அனைவரும் பூம்..பூம் அப்ரிடி என்று அழைப்பர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சரீன் கான் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பல்வேறு கேள்விகள் கேட்டார். தொகுப்பாளர் நீங்கள் அப்ரிடி ரசிகர் தானே என்று கேட்ட போது, சிரித்து கொண்டே நான் அப்ரிடியை முதல் நாள் பார்த்த போதே அவருடைய ரசிகர் ஆகிவிட்டேன்.

அதுமட்டுமின்றி அவர் 32 பந்துகளோ, 35 பந்துகளிலோ சதம் அடித்து அசத்தினார். அதை ரசித்தேன், அவரின் தலைமுடி மிக அழகாக இருக்கும், தலைமுடி மட்டுமின்றி, அவர் பார்ப்பதற்கும் ஸ்மார்ட்டாக இருப்பார், அவரை சந்தித்த போது, என்னுடைய கனவு பலித்தது போல் இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்