கோஹ்லி-அனுஷ்கா திருமணம் எப்போது? வெளியானது தகவல்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது நியூசிலாந்து அணியுடனான தொடர்களில் விளையாடி வருகிறது.

இதையடுத்து இந்திய அணி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.

இத்தொடரில் அணியின் தலைவரான கோஹ்லி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் கோஹ்லி தான் காதலித்து வரும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகவும், அதன் காரணமாகவே கோஹ்லி விடுப்பு கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது குறித்து திகதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்