நடுரோட்டில் காரை நிறுத்தி சச்சின் டெண்டுல்கர் செய்த செயல்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சாலை பயணத்தின் போது காரை திடீரென நிறுத்திய சச்சின் தெண்டுல்கர், பைக்கில் செல்வோரிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.

பின்னர் விமான நிலையத்துக்கு காரில் செல்லும் வழியில் பைக்கில் பயணம் செய்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதை சச்சின் கண்டார்.

உடனே காரை நிறுத்துமாறு ஓட்டுனரிடம் கூறிய சச்சின் பைக்கில் சென்றவர்களிடம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

அப்போது அந்த வழியாக கணவருடன் பைக்கில் வந்த பெண் ஹெல்மெட் அணியாமல் வந்ததை கவனித்த சச்சின் அவரிடம் ஹெல்மெட் அணிந்து தான் பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சச்சினை நேரில் பார்த்ததும் திகைத்து போன அப்பெண், பின்னர் அவரிடம் வருத்தம் தெரிவித்ததோடு இனிமேல் ஹெல்மெட் அணிவேன் என உறுதியளித்தார்.

இது சம்மந்தமான வீடியோவை சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்