ரெய்னாவை மறைமுகமாக சாடிய டோனி: காரணம் என்ன?

Report Print Gokulan Gokulan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தன் சகவீரரான ரெய்னாவை மறைமுகமாக சாடியதற்கு காரணம் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ’ஆல்-ரவுண்டராக அறியப்பட்டவர் சுரேஷ் ரெய்னா. சமீப காலமாக வாய்ப்பளிக்கப்டாமல் இருந்த அவர் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் கேப்டன் டோனி குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.

அதில், டோனிக்கு கோவம் வராது என்பதெல்லாம் பொய். அவரை கேமரா எப்போது பார்க்கும், பார்க்காது என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

தன் பார்வையில் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக்கொள்ள மாட்டார். சில சமயங்களில் ’கொஞ்சமாவது உணர்ச்சிகளை காட்டுங்கள்’ என கேட்கும் எண்ணம் கூட தோன்றியுள்ளது என பேசியிருந்தார்.

இவ்வாறு அணியின் முன்னாள் கேப்டன் குறித்து அவர் பேசியிருந்த நிலையில் அதற்கு மறைமுகமாக பதிலளித்திருந்தார் டோனி.

அதில், களத்தில் இறங்கி விட்டால் நான் கடினமாக இருப்பேன், நகைச்சுவையுடன் பேசமாட்டேன். மகிழ்ச்சியாக இருக்க பல்வேறு இடங்கள் இருக்கின்றது. வீரர்கள் அறையில் மட்டும்தான் ஜாலியாக இருப்போம், இதுவே உண்மை என கூறியிருந்தார்.

எப்போதும் தன்மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மவுனத்தை மட்டுமே பதிலாக தரும் டோனி இம்முறை பேசியிருப்பதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

டோனி கேப்டனாக இருந்தபோது நடந்த இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலை கிண்டல் செய்து சிலெட்ஜிங்கில் ஈடுபட்டுள்ளார் ரெய்னா.

இதுகுறித்து அக்மல், கேப்டன் டோனியிடம் முறையிட ரெய்னாவை கடுமையாக எச்சரித்துள்ளார் டோனி.

இதை மனதில் வைத்து ரெய்னா பேசியதாகவும், அதனால் தான் டோனி பதிலடி கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...