கோஹ்லி திருமணத்துக்கு இரண்டு வீரர்களுக்கு மட்டுமே அழைப்பு: அவர்கள் யார்?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

கோஹ்லி திருமணத்துக்கு கிரிக்கெட் உலகிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்குக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லியும், பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள்.

இருவருக்கும் வரும் 12-ஆம் திகதி இத்தாலியின் மிலான் நகரில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பு எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் குறித்த புது தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, கோஹ்லி சார்பில் கிரிக்கெட் உலகிலிருந்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்குக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

அதே போல கோஹ்லிக்கு சிறு வயதில் பயிற்சியளித்த பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவுக்கும் அழைப்பு போயுள்ளது.

திருமண நிகழ்வானது எளிமையாக நடக்கவுள்ளதால் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers