நாடு திரும்பிய புதுமணத் தம்பதியினர்: அழகிய கோஹ்லி- அனுஷ்காவின் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

புதுமண தம்பதியான விராட் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் இருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

இருவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் படம் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கோஹ்லி குர்தா உடையிலும், அனுஷ்கா இளம் சிவப்பு சல்வாரிலும் உள்ளார்.

இவர்களது திருமண வரவேற்பு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 21 ஆம் திகதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் இருவரது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதை தொடர்ந்து 2-வது திருமண வரவேற்பு மும்பையில் 26 ஆம் திகதி நடக்கிறது. இதில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்காக விராட் கோஹ்லி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. இதேபோல இன்று தொடரும் 20 ஓவர் தொடரிலும் ஓய்வு கேட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers