கோஹ்லியை திருமணம் செய்த பிறகு அனுஷ்காவிற்கு கிடைத்த சந்தோஷமான செய்தி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

போர்ப்ஸ் நாளிதழ் இந்தியாவின் ‛டாப்-100' பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ‛டாப்-100' பிரபலங்களை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது.

வருமானம் மற்றும் புகழின் அடிப்படையில் வெளியிடப்படும் இப்பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

இதில், விராட் கோஹ்லியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம்பிடித்துள்ளனர். டிசம்பர் 22 ஆம் திகதி இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு அனுஷ்காவுக்கு கிடைத்த நற்செய்தியாக அவர் இதனை பார்க்கிறார். விராட் கோஹ்லி 3வது இடத்திலும், அனுஷ்கா சர்மாக 32 வது இடத்திலும் உள்ளார்.

இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார், இரண்டாவது முறையாக நான் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன் என்று பதிவிட்டு அதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்