கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணனும் மும்பை இண்டியன்ஸ் அணி வீரருமான குணால் பாண்ட்யா திருமணம் மும்பையில் நேற்று நடந்தது.
குணால் பாண்ட்யாவும், பன்குரி ஷர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கோலாகலமாக நேற்று இருவருக்கும் மும்பையில் திருமணம் நடந்தது.
திருமண வைபவத்தில் நடிகர் அமிதாப்பச்சன், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த ஆண்டு இந்திய அணி வீரர்களான புவனேஷ் குமார், ஜாகீர்கான், வீராட் கோஹ்லி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்