திருமண மோதிரத்தை கழுத்தில் அணிந்துள்ள விராட் கோஹ்லி

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
361Shares
361Shares
ibctamil.com

தென் ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ள விராட் கோஹ்லி தனது காதல் மனைவியுடன் எடுத்துள்ள புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் ஜனவரி 5-ஆம் திகதி முதல் தென் ஆப்ரிக்கா- இந்திய அணி இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது.

இதற்காக இந்திய அணி வீரர்கள் தென் ஆப்ரிக்காவில் முகாமிட்டுள்ள நிலையில், கோஹ்லி தனது மனைவியுடன் தலைநகர் கேப் டவுனுக்கு சென்றுள்ளார்.

ட்விட்டரில் ”அழகான கேப்டவுன், அனுஷ்காவுடன் ரசிக்கும் பொழுது கூடுதல் அழகு” என்னும் தலைப்பிட்ட அவர்களின் செல்ஃபி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விராட் கோஹ்லி ரசிகருடன் எடுத்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது, காரணம் கழுத்தில் செயினுடன் நிச்சயதார்த்த மோதிரத்தை விராட் கோஹ்லி அணிந்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்