இதயமே உடைந்துவிட்டது: ஒலிம்பிக் தங்க மங்கையின் பாலியல் குற்றச்சாட்டு

Report Print Balamanuvelan in ஏனைய விளையாட்டுக்கள்
412Shares
412Shares
ibctamil.com

சமீபத்தில் நடந்து முடிந்த கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகைகள் பாலின ரீதியாக துன்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு நிறத்தில் உடை அணிந்து வந்தது உலகத்தின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் 130க்கும் அதிகமான விளையாட்டு வீராங்கனைகள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களின் மருத்துவரான Larry Nassar மீது துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் நான்கு முறை ஒலிம்பிக் சேம்பியனான Simone Biles முக்கியமானவர்.

Rioவில் நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற Simone Biles, தானும் Nassarஆல் பாலினத் துன்புறுத்தலுக்குள்ளானதாகத் தெரிவித்துள்ளார்.

மனதை நெகிழச்செய்யும் பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்த Biles, எங்கே நான் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டேனோ அங்கேயே மீண்டும் 2020இல் விளையாடச் செல்லவேண்டியிருப்பதை நினைக்கும்போது எனது இதயமே உடைந்துவிடும் போலிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இவர் தவிர ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்களான Raisman மற்றும் McKayla Maroney ஆகியோரும் இதேபோல் குற்றம் சாட்டியுள்ளனர்.

மருத்துவர் என்ற போர்வையில் விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கின 54 வயது Larry Nassar டிசம்பர் மாதம் குழந்தைகளை பாலினத் துன்புறுத்தல் செய்யும் படங்களை தனது கம்ப்யூட்டரில் வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கினதற்கான தண்டனை Nassarக்கு இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்