60 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த தடகள வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
71Shares
71Shares
ibctamil.com

அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், 60 மீட்டர் தூரத்தை 6.37 வினாடிகளில் கடந்து, கிறிஸ்டியன் கோல்மேன் உலக சாதனை படைத்துள்ளார்.

தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கிலெம்சன் பல்கலைக்கழத்தில், 60 மீட்டர் தூர உள்ளரங்கு தடகள ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஜார்ஜியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் கோல்மேன், 6.37 வினாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார்.

இதன்மூலம் கடந்த 2001ஆம் ஆண்டு, அமெரிக்காவின் மெரிஸ் கிரினியின் சாதனையை (6.39 Sec) முறியடித்துள்ளார். சுமார் 17 ஆண்டுகால சாதனையை கோல்மேன் தகர்த்துள்ளார்.

எனினும், இந்த சாதனையை தடகள சம்மேளனங்களுக்கான சர்வதேச சங்கம், மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்முறை தடகள வீரராக, இந்த ஆண்டிலிருந்து களம் காணும் கோல்மேனின் முந்தைய சாதனை, 60 மீட்டர் இலக்கை 6.45 வினாடிகளில் கடந்ததே ஆகும். மேலும், தற்போதைய சாதனையை ‘இது சிறப்பான தொடக்கம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டியன் கோல்மேன், 100 மீட்டர் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்