விளையாட்டால் இணையும் வடகொரியா மற்றும் தென்கொரியா

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
50Shares
50Shares
ibctamil.com

தென்கொரியாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வதற்காக, வடகொரிய மகளிர் வீராங்கனைகள் தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.

வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத சோதனைகளால், தென்கொரியாவுடன் விரோதபோக்கு உண்டானது.

இந்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில், குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முடிவை வடகொரியா எடுத்தது.

இதனைத் தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரு நாடுகளும், ‘ஐக்கிய கொரிய’ தீபகற்பக் கொடியுடன் ஒரே அணியாக, ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்க கடந்த வாரம் முடிவு செய்தன.

அதன்படி, வடகொரியாவைச் சேர்ந்த 12 வீராங்கனைகள், தென்கொரியாவைச் சேர்ந்த 23 வீராங்கனைகளுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இதுகுறித்து தென்கொரிய மகளிர் ஐஸ் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் சாரா மர்ரி, ‘அரசியல் காரணங்களுக்காக எங்கள் அணி பயன்படுத்தப்படுவது ஒரு சவாலான சூழ்நிலை.

ஆனால், அவ்வாறு பயன்படுத்தப்படுவது அணியின் நலனைவிட முக்கியமானது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமும், ‘உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள கொரியர்கள் அனைவரும், பிற நாடுகளின் துணையின்றி கொரிய இணைப்புக்காகப் பாடுபட வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டி வரும் பிப்ரவரி மாதம் 9ஆம் திகதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்