இதுதான் கவர்ச்சிகர செல்பி: வைரலாகும் யுவராஜ் தம்பதியின் புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
413Shares
413Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும், அவரது மனைவியும் நடிகையுமான ஹேசல் கீச்சும் ட்விட்டரில், தங்களது செல்ஃபி புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவிட்டு வைரலாகி வருகின்றனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்கும், ஹிந்தி நடிகை ஹேசல் கீச்சும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், யுவ்ராஜ் சிங் தனது மனைவி எடுத்த செல்ஃபி புகைப்படத்தை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘உங்களின் மனைவி புகைப்படம் எடுக்க Busyஆக இருக்கும் போது, உள்ளூர எரிந்தாலும் போஸ் கொடுக்க வேண்டும், இதுவே செக்ஸியான செல்பியாக இருக்கும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹேசல் கீச் தனது கணவர் தூங்கும்போது எடுத்த செல்ஃபியை பதிவிட்டு, ‘இந்த செல்ஃபி கவர்ச்சிகரமானது. ஏனெனில் இதில் நீங்கள் இருக்கிறீர்கள் யுவ்ராஜ். (மக்கள் ஆமாம் என்று வாக்களிப்பார்கள் என்று பயப்படுகிறேன்) ஹிஹிஹி... கடைசியில் நீங்கள் தூங்கும் தனித்துவமான செல்ஃபியை நான் எடுத்துவிட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல, இருவரும் மாறி மாறி தங்களது செல்ஃபி புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்