ஹர்பஜன் சிங் தமிழ்ல போட்ட டுவிட்டெல்லாம் இவருடையதுதானாம்! வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
217Shares
217Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் போட்ட டுவிட்டெல்லாம் திண்டுக்கல் மாவட்டைத்தை சேர்ந்த அவரின் ரசிகருடையது என தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இன்ஜினியரான இவர் தற்போது அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் டுவிட்டரில் ஹர்பஜனை பின்தொடர்ந்துள்ளார். ஹர்பஜனின் ஆட்டம் குறித்து விமர்சனங்கள் எழுந்தபோதும் ரசிகர்கள் அவரை விமர்சித்தப் போதும் டிவிட்டரில் அவருக்கு ஆதரவாக பதிலடி கொடுத்து வந்துள்ளார் சரவணன்.

இதனால் பிரமித்துப் போன ஹர்பஜன், தனது மேலாள விக்ரம்சிங்கின் தொலைபேசி எண்ணை சரவணனிடம் கொடுத்து அவரை தொடர்புகொள்ளுமாறு கூறியுள்ளார்.

பின்னர் தனது மேலாளர் மூலம் சரவணன் குறித்த மொத்த தகவலையும் அறிந்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்நிலையில் சரவணன் ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அதைத்தான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங்கின் அந்த தமிழ் பொங்கல் வாழ்த்து டுவிட்டு வழக்கத்தை விட அதிகமான லைக்குகளை அள்ளியது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல்லில் சரவணனை சந்தித்ததாக தெரிவித்த ஹர்பஜன் கடவுள் உங்களை ஆர்சிர்வதிக்கட்டும் டேக் கேர் என தெரிவித்துள்ளார். இதற்கு உணர்ச்சி பொங்க ஹர்பஜனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சரவணன்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்