வெறும் 2 ரன்னில் அவுட்! 51 வயதிலும் அசத்தும் வாசிம் அக்ரம்

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்
325Shares
325Shares
ibctamil.com

பாகிஸ்தான் அணியின் ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமின் அசத்தல் ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அசத்தி வந்த வாசிம் அக்ரம்(வயது 51), கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முல்டான் சூப்பர் லீக் போட்டியின் சுல்தான் லெவன் அணிக்கு கேப்டனாகச் செயல்பட்டு வருகிறார்.

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொதுதளத்தில் விளையாட வந்துள்ள அக்ரமின், அதே இன் ஸ்விங்கர் தற்போதுள்ள வீரர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

குறிப்பாக இம்ரான் நஸீர் உள்ளிட்ட வீரர்கள் ஓரளவு சமாளித்து ஆடியபோதும் நட்சத்திர வீரர் சோயப் மாலிக் 2 ரன்களில் தன் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

விக்கெட்டுகளை அள்ளி குவித்த அக்ரமின் பவுலிங்கை கண்ட அவரது ரசிகர்கள் உள்ளிட்ட இக்கால கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடத்திலும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தன் கிரிக்கெட் வாழ்வில் தான் வீசிய ‘டெட்லி இன்ஸ்விங்கர்’ மூலம் டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் வாசிம் அக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்