அந்தரத்தில் பறந்த வீராங்கனை: ஒலிம்பிக்கில் புதிய உலக சாதனை

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

தென் கொரியாவில் தற்போது நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக்கின் ஃபிரி ஸ்கெட்டிங் போட்டியில், அமெரிக்க வீராங்கனை ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யா, கனடா நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளுடன், அமெரிக்க வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடினர். இதில், அமெரிக்க வீராங்கனை மிராய் நகாசு புதிய சாதனையை படைத்தார்.

அதாவது, போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய மிராய், ’Triple Axel’ செய்து சாதனை படைத்துள்ளார். ஐஸ் ஸ்கேட்டிங்கில் செய்யப்படும் வித்தியாசமான சாதனை இது.

'Triple Axel’ என்பது ஸ்கேட்டிங் செய்து கொண்டே இருக்கும்போது, மேலே எழும்பி மூன்று முறை சுற்றுவார்கள். வேகமாக சுற்றிவிட்டு மீண்டும் சரியாக தரை இறங்க வேண்டும். இது பார்ப்பதற்கு ஜிம்னாஸ்டிக் போலவே இருப்பதனால், இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் உடல் வாகிற்கு, இதனை செய்ய முடியாது என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், மிராய் நகாசு தான் ஸ்கேட் செய்ய ஆரம்பித்த 22 வினாடிகளிலேயே ‘Triple Axel’ செய்து அசத்தினார்.

இதன் மூலம், மிகக் குறைந்த நொடியில் இந்த சாதனையை செய்த ஒரே பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சாதனையை செய்த முதல் அமெரிக்க வீராங்கனை என்ற சாதனையை செய்துள்ள மிராய், உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்