டோனி- கோஹ்லியை வெட்கப்பட வைத்த கேரளா அழகி வைரல் பிரியா

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
583Shares
583Shares
lankasrimarket.com

காதலர் தினம் வருவதை முன்னிட்டு கடந்த 9-ஆம் திகதி ஒரு அடாரு லவ் என்னும் படத்தில் இடம்பெற்றுள்ள மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் இணையத்தில் வெளியானது.

இப்பாடல் வெளியான நிமிடமே அந்த பாடலில் இடம் பெற்றிருந்த மாணவியான பிரியா பிரகாஷின் கண் அசைவு தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்ததால், மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் மீம்ஸ்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தனர்.

அந்த வகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களான கோஹ்லி, டோனி, கவுதம் காம்பீர் போன்றவர்களையும் இதில் இணைத்துள்ளனர்.

ஒரு சில புகைப்படத்தில் அந்த மாணவி பார்ப்பது போன்றும், கோஹ்லி மற்றும் டோனி வெட்கப்படுவது போன்றும் உள்ளது.

சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ள 18 வயது பிரியா பிரகாஷ் கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர், B.com படித்து வரும் இவரை தற்போது டுவிட்டரில் 4.3 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

இதற்கு முன்னர் கேரளாவின் ஜிமிக்கி கம்மல் பாடல் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்