பிரபல நடிகையை காதலிக்கும் ஹர்திக் பாண்ட்யா: வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
325Shares
325Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, தனது காதலியான நடிகை எல்லி அவ்ரமுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் கோஹ்லி, பாண்டியா உள்ளிட்ட ஆறு வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தி நடிகை பரினிதி சோப்ராவை ஹர்திக் பாண்டியா காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் அதை மறுத்தனர்.

இதனிடையில் நடிகை எல்லி அவ்ரமை பாண்டியா தற்போது காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இருவருமே அந்த செய்தியை மறுக்கவில்லை.

திங்கட்கிழமையன்று பாண்டியாவும், எல்லியும் ஒரே காரில் ஜோடியாக மும்பை விமான நிலையத்துக்கு வந்தனர்.

பாண்டியா மட்டும் காரிலிருந்து இறங்க எல்லி அவருக்கு கைகாட்டினார், இதை சிலர் புகைப்படமாக எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.

Credit: Yogen Shah

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்