பிரபல நடிகைகளை திருமணம் செய்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
368Shares
368Shares
lankasrimarket.com

கிரிக்கெட் உலகின் பல முன்னணி வீரர்கள், திரையுலகை சேர்ந்த பிரபல கதாநாயகிகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா

இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மா சில ஆண்டுகளாக காதலித்த நிலையில் கடந்த டிசம்பர் 11-ஆம் திகதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.


யுவராஜ் சிங் - ஹசல் கீச்

பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட யுவராஜ் சிங் பின்னர் பில்லா திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஹசலை மணந்தார்.


ஜாகிர்கான் - சகரிகா கட்கே

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர்கான், நடிகை சகரிகா கட்கேவுடனான காதலை முதலில் மறுத்து வந்தாலும், பின்னர் கடந்தாண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.


ஹர்பஜன் சிங் - கீதா பஸ்ரா

8 ஆண்டுகளாக ஹர்பஜனும், நடிகை கீதாவும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2015-ல் இல்லற வாழ்க்கையில் இணைந்தனர்.


அசாரூதின் - சங்கீதா பிஜ்லானி

இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாரூதினும், நடிகை சங்கீதாவும் விளம்பர படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்தனர்.

இதையடுத்து 1996-ல் இருவருக்கும் திருமணம் நடந்து பின்னர் சில ஆண்டுகளில் விவாகரத்தும் ஆனது.


விவியன் ரிச்சட்ஸ் - நீனா குப்தா

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ரிச்சட்ஸ், பிரபல நடிகை நீனா குப்தாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர்.

இவர்களுக்கு மசாபா குப்தா என்ற மகள் உள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்