வாக்காளர் சீட்டில் தவறுதலாக இடம்பெற்ற கோஹ்லி புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநில இடைத்தேர்தலில் வாக்காளர் சீட்டில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் இடைதேர்தல் நடக்க உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலின், வாக்காளர் சீட்டு வெளியானது.

அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு வாக்காளர் சீட்டில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. கோஹ்லிக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

ஆனால், அவரது பெயர் வாக்காளர் சீட்டில் இடம்பெற்றுள்ளது. பட்டியலில் இல்லாத ஒரு பெயர், எப்படி வாக்காளர் சீட்டில் வந்தது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், தேர்தல் பணிக்காக சோதனை செய்யும் போது விராட் கோஹ்லி படத்தை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

அதன் விவரங்களில் கோஹ்லியின் பெயரும், ஊர் மற்றும் முகவரியும் கொடுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேறு ஏதாவது முறைகேடுகள் இதில் நடந்துள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த விடயம் இணையத்தில் பரவி கிண்டலுக்குள்ளாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers