நண்பர்கள் கேட்கும் கேள்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது: வேதனையில் ஷமி மகள்!

Report Print Harishan in ஏனைய விளையாட்டுக்கள்

தன் அம்மாவும் அப்பாவும் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என ஷமி -ஹசினின் குழந்தை விருப்பம் தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக அறியப்பட்ட முகமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசினுக்கும் இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது.

ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது, அவர் தன் சகோதரனுடன் என்னை உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறார் என பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வெளியிட்டிருந்தார் ஹசின்.

மட்டுமின்றி, சில பெண்களுடன் ஷமி ஆபாசமாக பேசியதாக சில ஸ்கிரீன்ஷாட்களையும் தன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஹசின்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்திருந்த ஷமி, இவை அனைத்தும் தன்னை வீழ்த்த நடைபெறும் சதித்திட்டம் என கூறியிருந்தார்.

ஹசின் ஜஹான் ஏற்கனவே திருமணம் முடிந்தவர். அவருக்கும் அவரது முதல் கணவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகள் தற்போது தந்தை சைப்வுதீனுடன் வாழ்ந்து வந்தாலும், இருவரும் ஷமியை தந்தை என்றே அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஹசினின் மூத்த மகள் கூறுகையில், “பள்ளியில் உடன் படிப்பவர்கள் உனது தந்தை செய்திகளில் கூறுவது போல் மோசமானவரா? அவருடன் பேசினாயா? என்று கேட்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டுமென்றால் மீண்டும் இருவரும் ஒன்று சேர வேண்டும்” என வருத்தத்துடன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்