காமன் வெல்த்தில் "calm" ஆக ஜெயித்த இந்திய வீரர்கள் !

Report Print Gokulan Gokulan in ஏனைய விளையாட்டுக்கள்

தங்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு பார்ப்பதற்கு நான்கடி எட்டு அங்குலம்தான் இருக்கிறார். 40 கிலோ எடையுள்ளவர் போலத் தோன்றினாலும் 48கிலோ எடைக்கான பிரிவில் snatch பிரிவில் 86 கிலோ எடையையும் clean and jerg பிரிவில் 110கிலோ எடையையும் தூக்கி இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

அவரது வெற்றியை எப்படிக் கொண்டாடினார் என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில் வீட்டிற்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன் வேறொன்றும் பெரிதாகக் கொண்டாடவில்லை. எல்லாப் போட்டிகளும் முடிந்தபின்தான் மற்ற கொண்டாட்டங்கள் எல்லாம் என்கிறார் மிரா.

ரியோ ஒலிம்பிக்ஸில் பதட்டமாகக் காணப்பட்ட மிரா இப்போது கூலாக சிரித்த முகத்துடன் பேட்டியை எதிர்கொள்கிறார்.

போட்டியில் வெல்வது பிரார்த்தனைகளாலா! பயிற்சிகளாலா!

பாகிஸ்தான் வீரர் அபு சூஃபியான் பளு தூக்கும் முன் மைதானத்தில் நுழையும் முன் இறைவனை சத்தமாக வேண்டியபடியே உள் நுழைகிறார், அதனைத் தொடர்ந்து அவரது பயிற்சியாளரும் அதே வேண்டுதலை அங்குள்ளோர் அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாக வேண்டுகின்றார்.

அங்குள்ள அனைவருக்கும் கேட்ட இவர்களின் வேண்டுதல் இறைவனுக்கு கேட்கவில்லை போலும். இவரால் அந்த எடையைத் தூக்க முடியவில்லை.

இந்திய வீரர் சஞ்சிதா சானு போட்டி அரங்கினுள் நுழையும்போது நிலத்தை தொட்டு வணங்குகிறார். பின் பார்வையாளர்களைக் கண்டு வணங்குகிறார். எடை தூக்கும் முன்பு அதனை முத்தமிடுகிறார்.

அதன்பின்னர் வெகு சாதரணமாக அந்த அசாதாரண (112கிலோ) எடையைத் தூக்கி இந்தியாவிற்கான தங்கத்தை உறுதிப் படுத்துகிறார்.

கடந்த வருடம் அர்ஜுனா விருது தரப்படாததால் வருத்தப்பட்ட அவர் இந்த முறை அதை வாங்கப்போவதை இதன் மூலம் உறுதி செய்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers