400 எண் கொண்ட ஜெர்சி எதற்காக? ரகசியம் உடைத்த பிராவோ

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஒவ்வொரு அணி வீரர்களுக்கும் 2 இலக்கம் எண்கள் கொண்ட ஜெர்சிகளையே அதிகமாக அணிவார்கள்.

அதிலும் ஒரு சில நட்சத்திர வீரர்கள் மட்டுமே 3 இலக்க எண்களை அணிவார்கள். சில வீரர்கள் ஜெர்சி எண்ணை தங்களின் ராசியாக எடுத்துக்கொண்டு அதை மாற்றாமல் விளையாடுவார்கள்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கெய்ரன் பொலார்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டிவைன் பிராவோ ஆகியோர் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாடியுள்ளார்கள்.

இது ரசிகர்கள் அனைவருக்கும் வியப்பாக இருந்தது. போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பிராவோவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நானும், பொலார்டும் மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இருவரும் இப்போது வெவ்வேறு அணிக்காக ஆடிக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இருவருக்கும் டி20 போட்டியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.

டி20யில் 400 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் பொலார்ட் என்ற பெருமை அவருக்கு இருக்கிறது. அதேபோல ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு லீக், மற்றும் டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரும் நான்தான்.

இந்த சாதனையை குறிப்பிடவே நாங்கள் இருவரும் 400 எண் அச்சிடப்பட்ட ஜெர்சியை அணிந்து விளையாட வேண்டும் என்று எங்களுக்குள் பேசி முடிவெடுத்தோம். அதன்படி முதல் போட்டியில் அதுபோல் அணிந்து விளையாடினோம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்