ஆக்ரோஷத்தில் கத்தும் கோஹ்லி: வைரல் வீடியோ

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் 3-வது ஆட்டத்தில் சுனில் நரேனின் அதிரடி ஆட்டத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

நேற்றைய ஆட்டத்தின்போது பெங்களூர் அணியில், டிவில்லியர்ஸ் 44 ரன்களிலும், கேப்டன் கோஹ்லி 31 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினர். கொல்கத்தாவின் பந்துவீச்சை இவர்கள் இருவரும் தான் அதிகமாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.

இவர்களுக்கு பின்னர், களமிறங்கிய இளம் வீரர் சர்பராஸ் கான், 18வது ஓவரின் முதல் பந்தை சரியாக எதிர்கொள்ளாமல் மோசமான ஷாட் அடித்து ரிகு சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

சர்பராஸ் கானின் இந்த ஷாட்டை பெவிலியனில் இருந்து பார்த்த அந்த அணியின் கேப்டன் கோஹ்லி கையை தூக்கி இதெல்லாம் ஒரு ஷாட்டா என்பது போல் ஆக்ரோஷத்துடன் கத்தினர்.

கோஹ்லி ஆக்ரோஷத்துடன் கத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்