சென்னை அணியை தமிழில் பாராட்டிய தினேஷ் கார்த்திக்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த போட்டிக்கு பின்னர், கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பாராட்டியுள்ளார்.

நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா அணி அதிரடியாக வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்த வெற்றியின் மூலம் தன்னை திறமை வாய்ந்த தலைவராக நிலை நிறுத்தியுள்ளார்.

பொதுவாக மைதானத்தில் தமிழில் பேசக் கூடிய தினேஷ் கார்த்திக், நேற்றைய போட்டியில் எதிரணி வீரரான வாஷிங்டன் சுந்தரிடம் தமிழில் கிண்டலாக பேசியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் தினேஷ் கார்த்திக்கிடம், பெண் ஒருவர் கிரிக்கெட் பந்தில் கையெழுத்து கேட்டுள்ளார். அப்போது அவரது தமிழ் நண்பர், ‘இப்படியே 50 பந்துல கையெழுத்து போட சொல்லுங்க’ என்று கூறினார்.

அதற்கு தினேஷ் கார்த்திக், ‘ஜி கலாய்க்கிறீங்க பார்த்தீங்களா, அந்த அம்மாவ’ என கொமடியாக தெரிவித்தார். மேலும், ’மாஸ்ஸா பண்றாங்க நம்ம CSK. நேற்று செம Match-ல. கும்முன்னு ஸ்டார்ட் ஆச்சு’ என தெரிவித்துள்ளார்.

தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை அணி வெற்றி கொண்டதையே தினேஷ் கார்த்திக் இவ்வாறு பாராட்டியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்