இந்திய வீரர் மனைவியை டின்னருக்கு அழைத்த ரசிகர்: அவர் கூறிய பதில் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணி வீரரான ஸ்டூவர்ட் பின்னியின் மனைவியை ரசிகர் ஒருவர் டின்னருக்கு அழைத்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

இந்திய அணியின் ஆல் ரவுண்டரும், கர்நாடகா அணிக்கு விளையாடி வருபவர் ஸ்டுவர்ட் பின்னி. இவரின் மனைவி Mayanti Langer பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இந்தியா விளையாடும் தொடர்களில் Mayanti Langer தான் அதிகமாக தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது ஐபிஎல் தொடரிலும் கலக்கி வரும் இவருக்கு, சமூகவலைத்தளங்களில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சில சமயங்களில் இவர் வழங்கும் நிகழ்ச்சி தொகுப்புகளின் போது, இவரது ஆடை பல சர்ச்சைகளை ஏற்படுத்தியும், அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனது பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில், நான் உங்களை பார்க்க வேண்டும், போட்டியின் போது எனக்கு ஐபிஎல் எல்லாம் தெரிவதில்லை, நீங்கள் மட்டுமே தான் தெரிவீர்கள், நான் உங்களுடன் ஒரு இரவு உணவை எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

உங்கள் அழகை பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு Mayanti Langer, நன்றி அந்த இரவு உணவு எனக்கு மட்டுமின்றி என் கணவருக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்