சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேதர் யாதவ் தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இனிவரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மும்பை வாகன்டே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் முதல் ஆட்டத்தின்போது, சென்னை அணியும் மும்பை அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் 14 ரன்கள் எடுத்து கேதர் ஆடிக்கொண்டிருந்தபோது, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார்.

இந்த காயம் குணமாக 1 மாதம் ஆகும் என்பதால், அவர் இனிவரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என சென்னை அணியின் பயற்சியார் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்