டிவில்லியர்ஸை பாராட்டிய விராட் கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
103Shares
103Shares
ibctamil.com

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டிவில்லியர்ஸ் மற்றும் டி காக் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர் என பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் அணி நிர்ணயித்த 156 இலக்கினை பெங்களூரு அணி விரட்டி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணியில் விளையாடிய டிவில்லியர்ஸ் 57 ஓட்டங்களும், டி காக் 45 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,

உள்ளூர் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டம் என்பதால் இது எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி.

கடந்த ஆண்டு தொடக்கப் போட்டி எங்களுக்கு சோதனையாக அமைந்தது. இந்த ஆண்டு பெங்களூரு அணி கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ், டி காக் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அவர்களுக்கு எனது பாராட்டுகள். மொத்தத்தில் இந்த ஆட்டம் எங்களுக்கு சிறப்பானதாக அமைந்தது’ என தெரிவித்துள்ளார்.

IPLT20

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்