தனி ஒருவனாக நடந்த போராட்டம்... கடவுள் கொடுத்த சக்தி: டோனி நெகிழ்ச்சி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
470Shares
470Shares
ibctamil.com

மொகாலியில் நடந்த ஐபிஎல் போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடியால் பஞ்சாப் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தனி ஆளாக போராடி, அணியை ஓரளவுக்கு மீட்டெடுத்தார்.

பஞ்சாப் அணியில் கடந்தப் போட்டிகளில் களமிறங்காத கிறிஸ் கெய்ல், இந்த முறை களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

கிறிஸ் கெய்ல், 33 பந்தில் 4 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

சென்னை அணியில் அணித்தலைவர் டோனி, பொறுமையாக ஆடினார். அதே நேரம் நல்ல பந்துகளை விளாசவும் செய்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை மொகித் ஷர்மா வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட பிராவோ ஒரு ரன் எடுத்தார்.

அடுத்த பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. மூன்றாவது பந்து வைடானது. அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். டோனி, அடுத்தடுத்து சிக்சர் அடிப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தனர் ரசிகர்கள். ஆனால், மொகித் சர்மா, பந்தை வைட் யார்க்கராக வீசினார்.

அடுத்தப்பந்தை டோனியால் அடிக்க முடியாமல் போனது. இதற்கடுத்தப் பந்து பவுண்டரிக்குப் போகும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட நிலையில் எல்லைக் கோட்டை டச் பண்ணவில்லை.

இதில் ஓடி ரன் சேர்க்கவில்லை டோனி. இதனால், பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியானது. ஆறுதலாக, கடைசி பந்தை சிக்சருக்குத் தூக்கினார் .

வெறும் 4 ரன்களில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. டோனி அவுட் ஆகாமல் 44 பந்தில் 5 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசினார்.

ஐபிஎல் போட்டியில் தோனியின் அதிகப்பட்ச ரன் இது. மூன்றாவது லீக்கில் ஆடியுள்ள சென்னை அணிக்கு இது முதல் தோல்வி.

பஞ்சாப் தரப்பில் ஆண்ட்ரூ டை 2 விக்கெட்டும் அஷ்வின், மொகித் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது கிறிஸ் கெய்லுக்கு வழங்கப்பட்டது.

போட்டி முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய டோனி, கிறிஸ் கெய்ல் சிறப்பாக ஆடினார், எந்த மாதிரியான பந்துகளை அடிக்காமல் விட்டோம் என்பது உள்ளிட்ட விஷயங்களை யோசித்து நாங்கள் செயல்பட வேண்டிய நேரம் இது. அனைத்து போட்டியிலும் வெற்றி அருகில்தான் இருக்கிறது. ஆனால், அணியில் உள்ளவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனது முதுகில் வலி ஏற்பட்டதால் போட்டியின் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கடவுள் எனக்கு அதிக சக்தியை கொடுத்திருக்கிறார். எனது கைகள் அதன் வேலையை செய்வதால் எனது முதுகை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. இது அதிகமான பாதிப்பாக இருக்கக் கூடாது என கூறியுள்ளார்,

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்