சென்னையை மிஸ் பண்ணாதீங்க டோனி: அன்பால் உருக வைத்த ரசிகர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னையை மீஸ் பண்ணாதீங்க டோனி என்று புனே ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழகத்தில் காவரி வாரியம் அமைக்காத நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என எதிர்ப்புகள் எழுந்தது.

இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸின் உள்ளூர் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன.

இது சென்னை அணி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் பஞ்சாப் உடனான போட்டிக்கு பிறகு புனேவுக்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவை அளித்துள்ளனர்.

மேலும் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில், சென்னையை மிஸ் பண்ணாதீங்க டோனி, சின்ன தல ரெய்னா லவ் யூ என்று எழுதப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இப்புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் பதிவிட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்