விடுவார்களா தமிழர்கள்: எங்கு சென்றாலும் வருவோம்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்பதால் சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என போராட்டம் நடைபெற்றதையடுத்து போட்டியானது புனேவுக்கு மாற்றம் செய்யப்பட்டது,

இதனால் போட்டியை பார்ப்பதற்காக, சுமார் ஆயிரக்கணக்கான ரசிகர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது சொந்த செலவில் தனி ரயில் மூலம் புனேவுக்கு அனுப்பி வைத்தது,

இதனால், புனேவில் நடைபெற்ற போட்டியில் மைதானம் முழுவதும் மஞ்சள் மஞ்சளாக காட்சி அளித்தது. இருப்பினும் விடுவார்களாக தமிழர்கள்...அங்கும் சென்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பதாகை ஏந்தியுள்ளனர்.

காளைகளை பாயவைத்து தமிழனுக்கு காவிரியை பாய வைக்க தெரியாதா? காவிரி வேண்டும் என வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்