டோனி குறித்து பெண் ரசிகை செய்த செயல்: கடுப்பான மனைவி சாக்‌ஷி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

தோனி தான் எப்போதும் எனது முதல் காதலர் என அவரின் தீவிர ரசிகை போஸ்டரில் எழுதிய விடயம் டோனியின் மனைவி சாக்‌ஷியை கடுப்பேற்றியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி புனே மைதானத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்தது

இந்த போட்டியின் போது சென்னை ரசிகை ஒருவர் டோனியிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சார்ட்டில், என் வருங்கால கணவர் என்னை மன்னிக்கவும்.

டோனி தான் எப்போதும் எனது முதல் காதலர். ஐ லவ் யூ டோனி என்ற போஸ்டரை காட்டினார்.

அந்த பெண் ரசிகையின் போஸ்டரை ஐசிசி தனது அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தது.

இந்நிலையில் இந்த விடயம் டோனியின் மனைவி சாக்‌ஷியை கடுப்பேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்