தடைக்கு பின்னர் டேவிட் வார்னர் என்ன செய்கிறார் தெரியுமா? வெளியான வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது கனவு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த மார்ச் மாதம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அந்த தொடரின் இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணியின் இளம் வீரர் பேன்கிராப்ஃட் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

அவருடன் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னரும் சிக்கினர். அதனைத் தொடர்ந்து, அவர்களில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருடமும், பேன்கிராப்ஃட்டுக்கு ஒன்பது மாதமும் விளையாட தடை விதிக்கப்பட்டது.

மேலும், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவும் அவர்களால் முடியாமல் போனது. இந்நிலையில், டேவிட் வார்னர் சிட்னி கடற்கரைக்கு அருகே உள்ள கழிமுகப் பகுதியில், தனது கனவு வீட்டை பிரம்மாண்டமாக கட்டி வருகிறார்.

இது தொடர்பாக, வார்னரின் மனைவி கேண்டிஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாதுகாப்பு தொப்பியை அணிந்து கொண்டு ஒரு தொழிலாளி போல வார்னர் கட்டிட வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ ‘நாங்கள் கனவு வீட்டைக் கட்டி வருகிறோம்’ என்ற பெயருடன் வெளியிடப்பட்டுள்ளது. வார்னர் வீடு கட்டி வரும் சிட்னி கடற்கரை பகுதி மிகவும் Costly ஆன பகுதியாகும்.

வார்னர் தற்போது தனது குடும்பத்தினருடன் மவுரபா பகுதியில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Twitter

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்