எனது கண்கள் கண்ணீரால் நிரம்பிய அந்த தருணம்: மனம் திறந்த சச்சின்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் போது அதனை தனது தாய் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு தனது 200 டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நடந்த இந்த டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தப்பட்டது.

அந்த போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் தற்போது பகிர்ந்துகொண்டதாவது, நான் என்னுடைய கடைசி மற்றும் 200 டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்த விரும்பினேன் என்பதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியாது.

நான் கிரிக்கெட் விளையாட்டை பழகிய வயதில் இருந்து, பள்ளியில் கிரிக்கெட் விளையாடியதில் இருந்து இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியதுவரை ஒரு முறைகூட நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை என் அம்மா பார்த்தது இல்லை.

கடைசியாக நான் ஓய்வு பெறும்போது அவர் என் விளையாட்டை முதல்முறையாக அரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக பிசிசிஐ நிர்வாகத்திடம் கூறினேன் அவர்களும் சரி என ஒப்புக்கொண்டனர்.

என் அம்மாவால் நடக்க முடியாத காரணத்தால், அவரை அழைத்துவர அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வான்கடே விஐபி அறையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

நான் விளையாடுவதை என் அம்மா பார்ககையில் எனது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. எனது கண்கள் குளமாகின. கவனமாக பேட்டிங் செய் என்ற உள்ளுணர்வு கூறிக்கொண்டே இருந்தது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் 118 பந்துகளைச் சந்தித்த சச்சின் 74 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மேற்கிந்தியத்தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 182 ஓட்டங்களும், 2-வது இன்னிங்ஸில் 187 ஓட்டங்களும் சேர்த்து தோல்வி அடைந்தனர். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 495 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers