வயதோ 19! ஐபிஎல் எதிரணிகளை மிரட்டும் ரஷீத் கான்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான், இந்த ஐபிஎல் தொடரில் தனது சுழற்பந்து வீச்சினால் எதிரணிகளை மிரட்டி வருகிறார்.

19 வயதாகும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரஷீத் கான். இவர், தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த வீரர் எனும் சாதனையை படைத்த ரஷீத் கான், சர்வதேச டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில், சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ரஷீத் கானின் பந்து வீச்சு எடுபடவில்லை.

இதனால், இவரது பந்து வீச்சில் இருந்த Magic போய்விட்டது என அனைவரும் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியில், ரஷீத் கான் தான் யார் என்பதை காட்டியுள்ளார். குறைந்த இலக்கினை நோக்கி பயணித்த மும்பை அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை ரஷீத் வீழ்த்தினார்.

மேலும், 4 ஓவர்கள் வீசிய அவர் 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டு கொடுத்து, 2 விக்கெட்டுடன் ஒரு ஓவரை மெய்டனும் செய்து அசத்தினார்.

முன்னதாக புவனேஷ்வர்குமார், ஸ்டாண்லேக் ஆகிய வீரர்கள் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, Form out வீரர்களின் விக்கெட்டை தான் ரஷீத் கான் எடுக்கிறார் என்ற விமர்சனத்தையும் நேற்றைய போட்டியில் உடைத்தார் ரஷீத் கான்.

அதாவது, நேற்றைய போட்டியில் புவனேஷ்வர்குமார், ஸ்டாண்லேக் ஆகியோர் விளையாடவில்லை. ஆனால், குறைவான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியை சமாளித்து பந்து வீசி தனது திறமையை ரஷீத் நிரூபித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஐ.சி.சி.யின் மிக முக்கியமான வீரர்களின் பட்டியலில் ரஷீத் கானின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், ஐ.சி.சி.யின் சிறந்த இணை வீரர் விருதையும் இவர் பெற்றுள்ளார். ரஷீத் கான் தற்போது ஆப்கான் அணிக்கு தற்காலிக அணித்தலைவராக உள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers