ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் பந்துகள் குறித்து வெளியான ரகசியம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் டி20 தொடரில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ பந்துகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் சுமார் 1500 பந்துகள் உபயோகிக்கப்படுகின்ற நிலையில் இந்த பந்துகளை அவுஸ்திரேலியாவின் கூக்கபுரா நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து கூக்கபுரா நிறுவனத்தின் தகவல் பிரிவு தலைமை நிர்வாகி ஷேனான் கில் கூறுகையில், ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே எங்கள் நிறுவனத்தின் பந்துகளை சப்ளை செய்து வருகிறோம்

ஒவ்வொரு பந்தும் முழுமையாக 20 ஓவர்களுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் தரமானதாக இருப்பதை உறுதி செய்கிறோம்.

இதில் தொடர்ந்து கவனம் செலுத்துவது மட்டுமல்லாது, தரத்தை இன்னும் மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்