பெங்களூர் அணி போட்டியை பார்க்க இனி வராதீங்க: அனுஷ்கா சர்மாவை திட்டி தீர்த்த ரசிகர்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்ற நிலையில் விராட் கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மாவை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

சென்னை - பெங்களூர் அணிகள் இடையிலான 2018-ஆம் ஆண்டு ஐபிஎல்-லின் 24வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது.

இப்போட்டியில் சென்னை அணித் தலைவர் டோனியின் அபார ஆட்டத்தால் அந்த அணி ஐந்து விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியை நேரில் காணவும், தனது கணவர் கோஹ்லியை உற்சாகப்படுத்தவும் அனுஷ்கா சர்மா வந்திருந்தார்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மா நேரில் வந்து காணும் பெங்களூர் போட்டிகள் அனைத்திலும் அந்த அணி தோல்வியடைந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையடுத்து இனி பெங்களூர் விளையாடும் போட்டியை நேரில் வந்து அனுஷ்கா சர்மா பார்க்கக்கூடாது என பெங்களூர் ரசிகர்கள் டுவிட்டரில் கோபமாக பதிவிட்டு வருகிறார்கள்.

லச்சி என்ற ரசிகர் கூறுகையில், ஒரு நடிகையாக உங்களை ரசிக்கிறேன் அனுஷ்கா. ஆனால் பெங்களூர் அணி விளையாடும் போட்டியை காண இனி நேரில் வராதீர்கள்.

நீங்கள் வருவதால் பெங்களூர் அணி தோற்பது போல உணர்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதே போல பல ரசிகர்கள் கோபத்துடனும், கிண்டலாகவும் அனுஷ்கா சர்மா குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers